தெறிக்க விடும் 'விவேகம்' பட சிங்கிள் டிராக்!

தெறிக்க விடும் 'விவேகம்' பட சிங்கிள் டிராக்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், விவேகம். இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர் நேற்று நள்ளிரவு வெளியானது.

சிங்கிள் ட்ராக்காக வெளியாகியுள்ள சர்வைவா (Surviva) என்ற பாடலை அனிருத் மற்றும் யோகி பி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளையும் யோகி பி-யே எழுதியுள்ளார். 34 விநாடிகள் வரும் இந்தப் பாடல் டீசரானது தமிழ், ஆங்கில வார்த்தைகளின் கலவையில் உருவாகி உள்ளது. 

"தோல்வி உந்தன் படிக்கட்டு.. உச்சம் ஏறி கொடிக்கட்டு' உள்ளிட்ட வரிகள் அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 12.01 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியான இந்த டீசரை, 8 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.