இனி பேஸ்புக்ல டைப் பண்ண வேணாம் :நெனச்சா போதும்

இனி பேஸ்புக்ல டைப் பண்ண வேணாம் :நெனச்சா போதும்

உலகம் எவ்வளவு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாலும் பேஸ் புக் ஐ உபயோகிக்க யாரும் மறப்பதில்லை . தொலைதூர நண்பர்களை இணைப்பதிலும் ,பொழுதுபோக்கிலும் , உலகமக்களிடையே பல மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்துதில் முக்கிய பங்காற்றி வருகிறது பேஸ்புக் .

இதனால் மக்கள் எளிதாக உபயோகிக்கும் வகையில் நிறைய தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம்  .


இதன் அடுத்தகட்ட முயற்சியாக  இந்நிறுவனம்  வித்தியாசமான பில்டிங் 8 என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது . இத்திட்டம் மூலம் டைப்  பண்ண வேண்டிய வார்த்தைகளை மனதில் நினைத்தால் போதும் அதை  அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது. அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகளை இது மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பேஸ்புக் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது .