இரட்டை இலை லஞ்ச விவகாரம்: தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் ராஜினாமா

இரட்டை இலை லஞ்ச விவகாரம்: தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் ராஜினாமா

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா டெல்லியில் பணிபுரிந்து வந்தார். மே 12-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை சென்னைக்கு  பவன் ரெய்னா அனுப்பி  வைத்ததாகவும் தற்போது அவர் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே  இரட்டை இலை வழக்கில்  பவன் ரெய்னாவை  டெல்லி போலீசார் விசாரித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.