தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் : முதல்வர்

தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் : முதல்வர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. இதன் காரணமாக் சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல் தமிழக சட்டப்பேரவை  கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவந்தன. இதனால் தமிழக சட்டப்பெறவி விரைவில் கூட்டப்படும். நீலகிரியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  ஊட்டி பேருந்து நிலையத்தை அதிநவீன பேருந்து நிலையமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி பேருந்து நிலையத்தை நவீனமாக்க 2 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் தற்போதுள்ள அரசு செயல்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.