வியர்வை நாற்றம் வருவது ஏன் தெரியுமா?

வியர்வை நாற்றம் வருவது ஏன் தெரியுமா?

பொதுவாக துர்நாற்றம் என்பது நம் உடலில் ஏற்படும் அதிக வியர்வையினால் வரக்கூடியது. உடல் துர்நாற்றம் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

நாம் தினமும் உண்ணும் உணவுகளில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், உடலில் இருந்து கீட்டோன்கள் வெளியேற்றிவிடும். இதனால் நம் உடம்பில் வியர்வை அதிகமாகி உடல் துர்நாற்றம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட காரணமாக உள்ளது. மன அழுத்தம் காரணமாக தோன்றும் வியர்வையானது மிகவும் மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசும்.