ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது: சீமான்

ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது: சீமான்

அரசியல் களம் நடிகர் ரஜினிகாந்தின் மனநிலைக்கு ஒத்துவராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் உரையாற்றிய  ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து சூசகமாக கூறினார். இறுதிநாளான இன்று பேசிய, அரசியல் குறித்து நான் பேசியது விவாதங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை. நிர்வாக  அமைப்பு சீர்கெட்டுப் போய் இருக்கிறது என்று கூறினார். இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழகர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ரஜினியை ஒரு நடிகராக கொண்டாடுகிறேன் அவர் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம்  சம்பாதிக்கட்டும். ஆனால் அரசியல் என்பது அவரது மனநிலைக்கு ஒத்துவராது. அரசியல் தவிர வேறு எந்த விஷயம் செய்தாலும் ரஜினியை நான் வரவேற்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.