பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா புனே?

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா புனே?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் புனே-டெல்லி அணிகள் மோதுகின்றன.

10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு  நடைபெறும் 52-வது லீக் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும், ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் மோதவுள்ளன. டெல்லி அணி தான் பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ள டெல்லி அணி, புனே அணியை வீழ்த்தி அதனையும் பிளே-ஆஃப் சுற்று தகுதியை இழக்க வைக்குமா அல்லது புனே அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.