குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது பாஜக

குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது பாஜக

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இன்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்குப் பின் ராம்நாத் கோவிந்த்தை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அமித் ஷா அறிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இரண்டு முறை (1994 மற்றும் 2000) மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை பணியாற்றியவர். 1998-ல் இருந்து 2002 வரை பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்புக்குத் தலைவராகப் பணியாற்றினார்.வரும் 23-ம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறினார்.