சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பணியாற்ற முடியாது: ஓ.பி.எஸ்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பணியாற்ற முடியாது: ஓ.பி.எஸ்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பணியாற்ற உரிமை இல்லை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். இதற்காக பாடுபட்டு வருகிறோம். ரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்  செய்துள்ளோம். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்தும், அங்கு  கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் விசாரணை துரிதபடுத்த வேண்டும். தேர்தல்  ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன், சுகேஷ் மீதான விசாரணையை விரைந்து நடத்த வேண்டும். மேலும் அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பணியாற்ற தார்மீக உரிமை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.