விரைவில் வருகிறது எமொஜி பாஸ்வேர்டுகள்!

விரைவில் வருகிறது எமொஜி பாஸ்வேர்டுகள்!

இனி பாஸ்வேர்டு மறந்து போகிறதே என்ற குழப்பம் வேண்டாம்? உங்களுக்கு பிடித்தமான எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி விரைவில் வரவுள்ளது.

ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வசதியைக் கொண்டு வரும் பணியில் ஜெர்மனி பெர்லின் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக்கழக வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின்  முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம்பர்களை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பாஸ்வேடை  மனப்பாடம் செய்ய வேண்டும். ஆனால் எமோஜியை எளிமையாக நினைவில் வைத்துக்  கொள்ளலாம். நீங்கள் என்ன உணர்வில் இருக்கிறீர்களோ அதனைக் கொண்டு உங்களின் எமொஜி பாஸ்வேர்டை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.