ரஜினிக்கு ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை

ரஜினிக்கு ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை

2.0 படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு முதலில் வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தன்னை ஒதுக்கிய தமிழ் திரையுலகம் வேண்டாம் என அவர் நோ சொல்லிவிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.