பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய  யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக  இருக்கும் என ஐரோப்பிய யூனியனின் ஆணையர் மார்கரீத் வெஸ்டேகர் அறிக்கையின்  மூலம் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள்  கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன்  தெரிவித்துள்ளது.