மார்ச் 31ல் மிரட்ட வரும் டோரா

மார்ச் 31ல் மிரட்ட வரும் டோரா

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள டோரா படம் வரும் மார்ச் 31ல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடித்து வரும் ஹாரர் திரில்லர் படமான டோரா தமிழ் மற்றும் மலையாளத்தில் மார்ச் 31ல் திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் காரும் கலக்கலாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.