குறைந்த அளவு தண்ணீர் மூலம் தென்னைமரம் வளர்க்க வழிமுறைகள்!..

குறைந்த அளவு தண்ணீர் மூலம் தென்னைமரம் வளர்க்க வழிமுறைகள்!..

தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் தென்னை மரத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வேளாண் பொறியில் துறை சார்பில் வறட்சி காலங்களில் நீர் சிக்கனம் குறித்த தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது

டிராக்டருடன் இணைக்கப்பட்டுள்ள குழி போடும் இயந்திரத்தின் மூலம் தென்னை மரத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் மூன்று அடி குழி போட வேண்டும். அதற்கு 4 இஞ்ச் பி.வி.சி., பைப்புகள் தேவைப்படும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பக்கங்களிலும் வட்ட பாத்தியில் வேரிலிருந்து 3 அடி தள்ளி குழி போட வேண்டும். குழியில் ஒரு அடிக்கு குப்பை மண் மற்றும் மணலை நிரப்ப வேண்டும். 

குழியின் மேல் பகுதியில் நீர் ஊற்ற வேண்டும். ஒரு மரத்திற்கு 300 முதல் 500 ரூபாய் வரை செலவாகும். மரத்தை சுற்றிலும் தென்னை நார் கழிவு உரம் இட வேண்டும். இந்த தொழில்நுட்பம் வறட்சியில் இருந்து தென்னை மரத்தை காக்க உதவும்.