சினிமாவாகும் எம்.பி. சசிகலா புஷ்பா வாழ்க்கை

சினிமாவாகும் எம்.பி. சசிகலா புஷ்பா வாழ்க்கை

ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஒதுங்கியிருக்கும் சசிகலா புஷ்பாவின் வாழ்க்கையை 'சிவா மனதில் புஷ்பா' என்ற பெயரில் படமாக எடுத்துவருகிறார் நடிகர் வாராகி.

இப்படித்தான் இருக்கவேண்டும்' என சிலரின் வாழ்க்கையை முன்மாதிரியாக  கொண்டுவாழ்வோம். அதேசமயம், 'இப்படி இருக்கவே கூடாது' என்றும் சிலரின்  வாழ்க்கையைப் பார்த்து எச்சரிக்கையாக இருப்போம். நான், இரண்டாவது  வகையில்தான் சசிகலா புஷ்பா வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கிறேன். படத்தின்  படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. படத்தின் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் நான்தான். சிவா கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன்.  சசிகலா புஷ்பா கதாபாத்திரத்தில் ஷிவானி குரோவர் என்பவர் நடிக்கிறார்.  ஏற்கெனவே அவர் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார் வாராகி.