பதற்றத்தின் உச்சத்தில் பாகுபலி தயாரிப்பாளர்

பதற்றத்தின் உச்சத்தில் பாகுபலி தயாரிப்பாளர்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை எகிறடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, பாகுபலி படத்தின் டிரைலர் வெளியாக இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பதிவேற்றியுள்ளார். மேலும், டிரைலரின் தணிக்கை சான்றிதழை இணைத்து இருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் திரையரங்குகளிலும், மாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களிலும் வெளியாக இருக்கும் டிரைலர் 2 நிமிடம் 20 வினாடி ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.