ஜூலை முதல் ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!

ஜூலை முதல் ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!

வரும் ஜூலை முதல் ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் முறையை இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்நாட்டு அரசு விசா விண்ணப்பிக்கும் முறையை இந்தியர்களுக்கு எளிதாக்க  திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 1-ம் தேதி முதல், அந்நாட்டுக்கு செல்ல விரும்பும், இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக விசா விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அலெக்ஸ்  ஹாக் கூறுகையில்,’ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாகவும், தொழில்  ரீதியாகவும் வர விரும்பும் இந்தியர்களுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்களது  குடும்ப உறவினர்களை சந்திக்க விரும்பும் இந்தியர்களுக்கு இது வசதியாக  இருக்கும்,’ என்றார்.