வீடு தேடி வரும் ஜியோ சிம்

வீடு தேடி வரும் ஜியோ சிம்

ஜியோ சேவை அறிமுகம் மூலம் இந்திய தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இலவச அழைப்புகள், டேட்டா என அனைத்து சேவைகளையும் 4ஜி வேகத்தில் ஜியோ வழங்கி வருகிறது. இதனால் ஜியோ சிம்கார்டுகளைப் பெற ரிலையன்ஸ் அவுட்லெட்டுகளின் வாசலில் வாடிக்கையாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்தசூழலில் ஜியோ சிம் மீது ஆர்வம் கொண்டும், அதை வாங்க முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று சிம்கார்டுகளை அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனைமுயற்சி நாட்டிலுள்ள மெட்ரோ நகரங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அலுவலகங்கள், கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.