உலகமெங்கும் 3 லட்சம் கணினிகளில் வைரஸ்

உலகமெங்கும் 3 லட்சம் கணினிகளில் வைரஸ்

உலகமெங்கும் 3 லட்சம் கணினிகளில் வைரஸ்:இணைய தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இந்திய வல்லுனர் உறுதி செய்தார்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய,  இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு,  இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும்  பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இ-மெயில் மூலம் பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரஸ், உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது.இந்த  வைரஸ்சின் புதிய பதிப்புகளைக் கொண்டு ‘ஹேக்கர்கள்’ (சட்டவிரோதமாக  கணினிகளில் ஊடுருவுகிறவர்கள்) தாக்குதல்கள் நடத்தாமல் தடுக்க உலகளாவிய  அதிகார வர்க்கத்தினர் போராடி வருகின்றனர்.

இந்த  நிலையில், ‘வான்னா கிரை’ வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு  இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரத்தை இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.