சச்சின் செய்யாததை கோலி செய்தார்: கங்குலி புகழாரம்

சச்சின் செய்யாததை கோலி செய்தார்: கங்குலி புகழாரம்

ஆஸ்திரேலிய அணியுடனா முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தேல்வியடைந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய அணி கேப்டன் விராத் கோலியின் பேட்டிங் மீது கடும் அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தினர். புனே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்தநிலையில், கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கங்குலி. கோலியும் சாதாரண மனிதர்தான். அவரால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக அவர் 4 சதங்களைப் பதிவு செய்தார். இதை சச்சினிடம் கூட நான் பார்த்ததில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.