தமிழகம் முழுவதும் சீரடைந்தது பேருந்து போக்குவரத்து.

தமிழகம் முழுவதும் சீரடைந்தது பேருந்து போக்குவரத்து.

பணிக்கு திரும்பினர் போக்குவரத்து தொழிலாளர்கள்: தமிழகம் முழுவதும் சீரடைந்தது பேருந்து போக்குவரத்து

சென்னையில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கின. இதனால்  பணிகளுக்கு செல்வோர் பேருந்துகளில் வழக்கமான பயணத்தை தொடங்கினர். கடந்த 3  நாட்களாக தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை  வலியுறுத்தி வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற  ஊழியர்களுக்கு பாக்கி தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அரசு க  கட்ட பேச்சுவார்த்தையை ஏற்கனவே நடத்தியிருந்தது. அதனை தொடர்ந்து  வேலைநிறுத்தத்திற்கு பிறகு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன்  போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று மாலை உடன்பாடு  ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த  வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தனர்.


நிலுவைத் தொகை  ரூ.1250 கோடியை தற்போது தற்காலை நிவாரணமாக வழங்குவதாக அமைச்சர்  தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை  கைவிட்டனர்.