இறந்த குழந்தை இறுதிச்சடங்கில் உயிர்பெற்ற அதிசயம்

இறந்த குழந்தை இறுதிச்சடங்கில் உயிர்பெற்ற அதிசயம்

வாரங்கல் அருகே இறந்ததாக அரசு மருத்துவமனை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கில் இருந்து குழந்தை ஒன்று உயிர் பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, உடல்நலக் குறைவு காரணமாக 450 கிராம் எடைக்குச் சென்றதால் எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டது.

பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை , கடந்த ஞாயிறு அன்று காலை 11.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர் சிராஜுதின், குழந்தையின் இறப்பை உறுதி செய்து, இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்தில், குழந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவுகள் ஏற்பட்டதைக் கண்டுள்ளனர். உடனடியாக மீண்டும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையின் இசிஜியை முறையாக பார்க்காமல் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.