பல ஆண்டுகளாக சிறுநீரை குடித்து உயிர் வாழும் விசித்திர மனிதன்!

பல ஆண்டுகளாக சிறுநீரை குடித்து உயிர் வாழும் விசித்திர மனிதன்!

நியூயார்க்கில் வசித்து வரும் டேவ் என்பவர் பல ஆண்டுகளாவே சிறுநீர் குடித்துப்பது வாழ்ந்து வருகிறார்.

பிரித்தானியா பகுதியை சேர்ந்தவர் டேவ் மர்பி, 54. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுநீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

கம்ப்யூட்டர் பிரோகிராமரான டேவிற்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதன், சிறுநீர் சிகிச்சை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின், டேவ் தினமும் சிறுநீர் குடிக்க துவங்கியுள்ளார்.

தவிர, அதன் நன்மைகள் பற்றி பலரிடம் விளக்கி வருகிறார்.
முதலில் சிறுநீர் குடிக்க கஷ்டமாக இருந்ததால், ஜூஸுடன் கலந்து குடித்ததாக கூறுகிறார். இதன் மூலம் 127 கிலோவில் இருந்து 77 கிலோவிற்கு உடல் எடை குறைத்துள்ளதாக கூறுகிறார்.

சிறுநீரை கழிவு என பலரும் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. சிறுநீர் நாம் குடிக்கும் நீரை விட சுத்தமானது என டேவ் கூறுகிறார். இதன்மூலம் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் உணர்ந்துள்ளதாக இவர் கூறியுள்ளார். தற்போது டேவ், தனது தாயையும் சிறுநீர் குடிக்க வைத்து வருகிறார்.