வோல்ஸ்வேகனிடம் இருந்து டுகாட்டியை கைப்பற்ற ராயல் என்ஃபீல்டு திட்டம்

வோல்ஸ்வேகனிடம் இருந்து டுகாட்டியை கைப்பற்ற ராயல் என்ஃபீல்டு திட்டம்

பிரபல இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி மோட்டார்ஸை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியைச் சேர்ந்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் டுகாட்டி மோட்டார்ஸ் இயங்கி வருகிறது. புகை மாசு முறைகேட்டில் சிக்கியுள்ள வோல்ஸ்வேகன் தனது இத்தாலிய நிறுவனமான டுகாட்டியை ரூ.10,500 கோடிக்கு விற்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஐசர் குழுமத்தின் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்திய மோட்டார் சந்தை மற்றுமின்றி உலக சந்தையிலும் அமோக வரவேற்பை பெற்று, புல்லட் சந்தையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. இந்நிலையில், டுகாட்டியை கையகப்படுத்தும் நோக்கில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் டுகாட்டி எவ்வாறு பொருந்தும்? என்கிற ஆராய்ச்சியில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக ஐசர் நிறுவனம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.