ஜேஎன்யுவில் சேலம் மாணவர் தற்கொலை

ஜேஎன்யுவில் சேலம் மாணவர் தற்கொலை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார்.

சேலத்தை அடுத்த சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், ஜேஎன்யுவின் நவீன வரலாற்றுத் துறையில் எம்பில் பயின்று வந்தார். இந்தநிலையில், பல்கலைக்கழகத்தை ஒட்டிய மாணவர்கள் தங்கும் விடுதிகள் நிறைந்த முனிர்கா பகுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதபரிசோதனை செய்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கில் தொடர்ந்து எழுதிவந்த முத்துக்கிருஷ்ணன், டெல்லி ஜேஎன்யுவின் சமத்துவம் இல்லை என்று கடந்த மார்ச் 10ல் எழுதியுள்ளார். ரோஹித் வெமூலா தற்கொலைக்கு நீதி வேண்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்த மாணவர் குழுவில் முத்துக்கிருஷ்ணன் பங்கெடுத்து வந்திருக்கிறார். தனது மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அவரது தந்தை ஜீவானந்தம், பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்களது தரப்பு மருத்துவரும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.