பழங்கள் சாப்பிடுவது எவ்வளவு நல்லதென்று உங்களுக்குத் தெரியும்?

பழங்கள் சாப்பிடுவது எவ்வளவு நல்லதென்று உங்களுக்குத் தெரியும்?

பழச்சாறு பருகுவது கூட எளிதான விஷயம் . இப்போதெல்லாம் கடைகளில் பழச்சாறு பருகுகிறார்கள் , ஆனால் அதன் விளைவு, சில கடைகளில் சுத்தமின்றி அழுகிய பழங்களை கழுவியும், கழுவாமலும் அரைத்து தருகிறார்கள். ஈக்கள் பரவுவதை காண்பீர்கள்.கலப்புப் பழங்கள் [mixedfruit] என்றால் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. அதில் கேசரி கலர் போன்ற கலர்களை பயன் படுத்தி கலப்பு பழம் தருகிறார்கள். இது சுவையாக இருப்பதால் அனைவரும் பருகிறார்கள். மாதுளம், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை போன்ற வற்றை பராமரிக்காமல் அழுகிய பழச்சாறாக தருகிறார்கள். தாகத்திற்கு ஏற்ப நாமும் அதை பருகுகிறோம். இதனால் வயிற்று வலி, நோய்க்கு ஆளாக்குகிறார்கள். எனவே சுத்தமின்றி பழச்சாறு பருகுவதை விட வீட்டிலே சுத்தமாக பழச்சாறு பருகுவது நல்லது .