கோடை காலத்தில் குழந்தைகள் ஏசி அறையில் இருக்கலாமா?

கோடை காலத்தில் குழந்தைகள் ஏசி அறையில் இருக்கலாமா?

கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குழந்தைகள், வீட்டில் இருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகளும் சூட்டால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலான குடும்பங்களில் ஏசி அமைக்கும் போக்கு அதிகரித்துள்ளது

கோடை காலத்தில் அதிகம் பசிக்காதது ஏன், பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா என்பன உள்ளிட்ட ஏராளமான கோடை கால சந்தேகங்களோடு குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்கிடம் பேசினோம்.

குழந்தைகள் ஏசி அறையில் இருக்கலாமா?

பொதுவாகவே ஏசி உடம்புக்குக் கெடுதல் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் நம்முடையது மாதிரியான வெப்ப மண்டலப் பிரதேசங்களில் குறிப்பாகக் கோடை காலங்களில் குழந்தைகளை ஏசி அறையில் இருக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை.

தூசி, குப்பை, வெயில், வியர்வை என மாசுபாட்டையும், அசவுகரியத்தையும் குறைக்க ஏசி போட்டுக் கொள்ளலாம். சுமார் 24- 26 டிகிரி வெப்பநிலையில் ஏசி இருக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிவித்து, அம்மாவின் அணைப்பில் குழந்தையை இருப்பது நலம் பயக்கும். அதே நேரத்தில் ஏசியை முறையாக 3 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும்.