எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது :

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது :

10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி  தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.மேலும் இந்த ஆண்டு முதல் +2  மற்றும் எஸ்.எஸ்.எல்.சி  தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மற்றம் செய்யயப்பட்டுள்ளது .அதன்படி மாணவர்களின்  "ரேங்க்" பட்டியலை வெளியிடாமல் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு அவர்களது மதிப்பெண்ணை எஸ்.எம்.எஸ். மூலம்  செல்போனிற்கு அனுப்பப்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.