ரூ.1,000-த்துக்கு 4ஜி போன்: ஜியோவின் மாஸ்டர் பிளான்

ரூ.1,000-த்துக்கு 4ஜி போன்: ஜியோவின் மாஸ்டர் பிளான்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்தவிலையில் 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு இலவச அறிவிப்புகளுடன் கடந்த செப்டம்பரில் இந்திய தகவல் தொடர்புத் துறையில் கால்பதித்தது. இலவசங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த ஜியோ, தற்போது படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தநிலையில், கூகுளுடன் இனைந்து 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்க முடிவு செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ திடமாக நம்புகிறதாம். ரூ.1,000 என்ற விலையில் 4ஜி பீச்சர் போன்களை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் தவிர ஸ்மார்ட் டிவிக்களுக்கு சாப்ட்வேர் தயாரிப்பிலும் இந்த இரு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது,