ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோன் இன்று முதல் இந்தியாவில் மீண்டும் விற்பனை!

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோன் இன்று முதல் இந்தியாவில் மீண்டும் விற்பனை!

ஸியோமி நிறுவனம், அதன் ரெட்மி நோட் 4 என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனின் இந்திய விற்பனையை மீண்டும் இன்று முதல் முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலாக, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குறிப்பாக, ரெட்மி நிறுவனத்தின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் அதிகளவில் செய்யப்பட்டதால், தினமும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோன், கையிருப்பில் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.

அந்த அளவுக்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோனுக்கு பெரும் தேவை காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்திய சந்தையில் இந்த ஃபோனை முழுவீச்சில் விற்பனைக்குக் கொண்டுவருவதாக, ஸியோமி கூறியுள்ளது.

தினசரி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோனுக்கு முன்பதிவு செய்ய முடியாமல், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனை கருத்தில்கொண்டே, மீண்டும் முழுவீச்சில் இதன் விற்பனையை தொடங்குவதாக, ஸியோமி குறிப்பிட்டுள்ளது.