போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம், அதுவரை அமைதி காப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த். இன்று கடைசி நாள் என்பதால் ரசிகர்கள் முன் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதல் நாள் பேசும்போது, நான் நாலு வார்த்தை சொன்னேன். ஒருவேளை அரசியலுக்கு வரலாம்னு நான் சொன்னது இவ்வளவு பெரிய வாதமா ஆகும்னு நினைக்கல. வாதவிதாங்கள் இருக்கலாம், எதிர்ப்பு இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வளரவே  முடியாது. அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம். ஆனால், சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதும்போது எனக்கு கஷ்டமா போயிடுது. ஏன் தமிழ் மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிடறாங்க, வார்த்தைகளை பயன்படுத்தறதுல அப்படின்னு வருத்தம். நான் தமிழனாங்கற கேள்வி வருது. கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டிக்காரனாகவோ, கர்நாடகக்காரனாவோ வந்தாலும் எனக்கு பணத்தையும் புகழையும் அள்ளிக் கொடுத்து நீங்க என்னை தமிழனாகவே ஆக்கிட்டாங்க. இப்ப நான் பச்சைத்தமிழன். என்னைய எங்கயாவது போன்னு சொன்னா  நான் இமயமலைல போய்தான் விழுவேன். வேற எங்கயும் போய் விழமாட்டேன். ஏன்னா, நல்ல தமிழ்மக்கள் இருக்கிற இங்க இருக்கணும், இல்லைன்னா, இமயமலைலதான் இருக்கணும். பழைய காலங்கள்ல எப்படின்னா, ராஜாக்களிடம் படைபலம் இருக்கும். நிறைய  பேர் இருக்கமாட்டாங்க. ஆனா, போர்ன்னு வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க. மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. அவங்க கடமையை செஞ்சுட்டே  இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவாங்க. அது  போல எனக்கும் கடமை இருக்கு. தொழில் இருக்கு. நீங்க ஊருக்கு போங்க, கடமையை  செய்யுங்க. போர்னு வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருப்பான். நன்றி என்று தெரிவித்துள்ளார்.