முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் நிதியுதவி வழங்க ஏற்பாடு :

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் நிதியுதவி வழங்க ஏற்பாடு :

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 நிதியுதவி அளிக்க- மத்திய அரசு முடிவு

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 நிதியுதவி அளிக்க- மத்திய அரசு முடிவு செய்துள்ளது.புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த தொகை வங்கி கணக்கில் நேரடியாக தவணை முறையில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி உதவி மூன்று தவணையாக வழங்கப்படும். முதலில்  மகப்பேறு பதிவு செய்தவுடன் முதல் தவணையாக 1000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் மூன்றாவது தவணைத் தொகை வழங்கப்படும். மத்திய அரசு இந்த திட்டத்திற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2020 வரை மாநில அரசின் பங்கு உடபட மொத்தம் 12,661 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7932 கோடி ரூபாயாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.