இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு? புதிதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அருண் ஜெட்லி, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கடந்தாண்டு நவம்பர் 9ல் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய பின்னர், 2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதேபோல பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் (டிசம்பர் 10 வரையிலான கணக்கின்படி) திரும்பப் பெறப்பட்டதாகவும் ஜெட்லி, தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 27ம் தேதி ரூ.9.921 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் பணப்புழக்கம், மார்ச் 3ம் தேதி கணக்குப்படி ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.