இனி பார்லர் வேண்டாம் , வீட்டிலே அழகு குறிப்புகள்

இனி பார்லர் வேண்டாம் , வீட்டிலே அழகு குறிப்புகள்

அழகு பொருட்கள் பயன்படுத்துவதை விட ,இதோ உங்களுக்கான எளிதான குறிப்புகள்

இதழ் சிலருக்கு கருப்பு, வெடிப்பாக வறண்டு காணப்படும். அதற்கு ரோஜா இதழ் அல்லது கொத்தமல்லி தழை இவற்றை இரவு நேரத்தில் உதட்டில் பூசி வந்தால் பளபளப்படையும் .

முடி உதிர்வதற்கு மூலக்காரணம் பொடுகு, உடலின் வெப்பம் இவை இரண்டும் ஒரு காரணம் . இவற்றை தடுக்க என்ன வழி ?

பொடுகு : தலையில் எண்ணெய் வைத்து வாரத்திற்கு 2 முறை குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.உடல் சூட்டை குறைத்தால் பொடுகு நீங்கும். முட்டை , எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு நீங்க வாய்ப்பு உள்ளது. சீயக்காய் அரைத்து குளிப்பது மிக நல்லது. கண்ட ஷாம்பூகளை பயன் படுத்துவதை விட [ dandruff ] பொடுகு ஷாம்பு க்களை உபயோகிப்பது நல்லது . கூந்தலை துவட்டும் போது அழுத்தக்கூடாது. ஈரத்தலையோடு சீவினாலோ அல்லது பின்னினாலோ பொடுகு வர வாய்ப்பு உண்டு. பின்பு உணவு பொருட்கள், கறிவேப்பிலை , நெல்லிக்கனி , மீன் , முட்டை . இவற்றை சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வதை தடுக்கலாம்.

உடல் வெப்பம் : எண்ணெய் தேய்த்து குளிப்பது குளிர்பானங்களை பருகுவது அதிக அளவில் தண்ணீர் அருந்துவது இவை வெப்பத்தை குறைக்கும் . அதிக வெப்பம் இருந்தால் இளநரை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வெயில் நேரத்தில் வறட்சியாக காணப்படும் . இவை 2 காரணத்தை தடுத்தாலே முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்