நலம் பல தந்து நல்வழி காட்டும் நரசிம்ம ஜெயந்தி

நலம் பல தந்து நல்வழி காட்டும் நரசிம்ம ஜெயந்தி

நலம் பல தந்து நல்வழி காட்டும் நரசிம்ம ஜெயந்தியை வழிபாடும் தினம் இன்று:

விஷ்னு  எடுத்த தசாவரதங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம்.ஒரு பக்தன் சொல்லை காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார் .மனிதனுக்கு வாக்கு முக்கியம் என்றும் வாக்கு தவறினால் அவன் மதிப்பு போய்விடும் என்பதை எடுத்து காட்டுகிறது நரசிம்ம அவதாரம்.இதேபோல பிரகலாதனின் வார்த்தையை காப்பாற்ற கம்பத்தை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன் .பிரகலாதன் தூணை காட்ட இரணியன் அதை  உடைத்தான் .மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய்  வெளிப்பட்டான்.நரேன் என்றால் "மனிதன்" என்றும் சிம்மம் என்றால் "சிங்கம் " என்றும்  பொருள். அதனால்தான் அவரை "நரசிம்மன்" என்றும் "நரசிங்கன் " அழைப்பார்கள் .நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை .அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும் என்பது நம்பிக்கை."லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.