ரஜினியை விளாசிய கட்ஜு

ரஜினியை விளாசிய கட்ஜு

அமிதாப் பச்சனை போன்றே ரஜினிகாந்தின் தலையிலும் ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போதிலிருந்து ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியே அனைவரிடமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு  தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தென் இந்தியர்கள் மீது நான் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் அவர்கள் சினிமா நட்சத்திரங்களை போற்றி வணங்கும் முட்டாள்தனத்தை என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது பல தென்னிந்தியர்கள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளனர். சிலர்  அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று  விரும்புகிறார்கள். ஆனால் ரஜினியிடம் அப்படி என்ன தான் உள்ளது? அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சனை போன்றே ரஜினிகாந்தின் தலையிலும் ஒன்றும் இல்லை என  தெரிவித்துள்ளார்.