பழசை மறக்காத தோனி

பழசை மறக்காத தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்தவர்.

கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்ட தோனி விஜய் ஹசாரே கோப்பைக்கான டி20 தொடரில் ஜார்க்கண்ட் அணியை வழிநடத்தி வருகிறார். அவர் தற்போது கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளார். இதையறிந்த கோரக்பூரைச் சேர்ந்த தோனியின் டீக்கடை நண்பர் தாமஸ், அவரைக் காண கொல்கத்தா வந்தார். கோரக்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரியும்போது தாமஸின் டீக்கடையின் தான் தோனியின் ஓய்வுநேரங்கள் கழியுமாம். 

தன்னைப் பார்க்க பழைய நண்பன் வந்திருப்பதை அறிந்த தோனி, தாமஸை வரவேற்றதுடன் நட்சத்திர ஹோட்டலில் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தார். வந்த பாதையை மறக்காத தோனியின் மாண்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.