பெங்களூரில் வரப்போகுதாம் சிரிப்பு பல்கலைக்கழகம்

பெங்களூரில் வரப்போகுதாம் சிரிப்பு பல்கலைக்கழகம்

பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்பு பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிரிப்பதால் உடலை நோய் அண்டாமல் தடுக்கலாம். சிரிப்பதற்காகவே ஒரு  பல்கலைக்கழகம் அமையவிருக்கிறது. அதுவும் கர்நாடகாவில். உலகில் இதுதான் முதல் சிரிப்புப் பல்கலைக்கழகமாம். பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்புப் பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இங்கு மண் குடிசைகள் வகுப்பறைகளாக அமையவுள்ளன. பல்கலைக்கலகத்தை சுற்றி வரும்போதே தானாகச் சிரிப்பு வர வேண்டுமாம். மத்திய, மாநில அரசு மற்றும் தனியாரின் ஒத்துழைப்போடு இதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன .