சேரியில் வாழ்ந்து பாருங்க கமல் ‘ திருமாவளவன் சீற்றம்!

சேரியில் வாழ்ந்து பாருங்க கமல் ‘ திருமாவளவன் சீற்றம்!

கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸில் இருக்கும் எல்லா போட்டியாளர்களும் சேரியில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளரான காயத்திரி ரகுராம் ’சேரி பிஹேவியர்’ என்ற வார்தையை பயன்படுத்தினார். இது சமூகவலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியது. அவர் குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி அவமானமாக பேசுகிறார் என்று நெடீசன்கள் அவரை வருத்தேடுத்தனர். இதனை முன்னிட்டு கமல் அவர்கள் அளித்த பேட்டியில் அவர் பேசியதற்கு தான் பொருப்பல்ல என்றும் அவருக்கு நான் கதை வசனம் எழுதித்தவில்லை என்று கூறினார். இந்நிலையில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கமல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்கள் சேரியில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.