ரஜினி அரசியலுக்கு வர்ரேன்னு சொன்னது மகிழ்ச்சி : கங்கை அமரன்!

ரஜினி அரசியலுக்கு வர்ரேன்னு சொன்னது மகிழ்ச்சி : கங்கை அமரன்!

ரஜினியின் இன்றைய பேச்சு, ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை தான் காட்டுகிறது என பாஜக.,வை சேர்ந்த கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.

“நல்லவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி கூறியுள்ளதோடு, நான் அரசியலுக்கு வந்தால், சம்பாதிக்கும் நோக்கத்தோடு, என் அருகில் வருபவர்களை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றும், அப்படிபட்டவர்களை இப்போதே விலகி விடுங்கள் என சொல்லியிருக்கின்றார். எனவே ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்.

அதே சமயம், அவர் பாஜக.,வுக்கு தான வருவாரா என்ற கேள்வி தேவையில்லாதது. நன் எப்போதுமே அவருடன் தொடர்பில் உள்ளேன். இன்று இரவு அவருடன் பேசிய பின் இதுகுறித்து மீடியாக்களிடம் பேசுகிறேன்.” என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.