ஜி.எஸ்.டியால் தள்ளுபடியை வாரி இறைக்கும் ஹூண்டாய் நிறுவனம்

ஜி.எஸ்.டியால் தள்ளுபடியை வாரி இறைக்கும் ஹூண்டாய் நிறுவனம்

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததை அடுத்து, ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அள்ளித் தருகிறது.

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் ஹூண்டாய் நிறுவனம், தனது கார்களுக்கு சலுகை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9% வரை தள்ளுபடி அளித்துள்ளது. ஹூண்டாய் மாடல் கிரிடா கார், ஜி.எஸ்.டிக்கு முன்பு ரூ.9.29 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரை விற்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.8.92 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.5.42 லட்சத்திற்கு விற்கப்பட்ட நியூ எக்ஸ் செண்ட் மாடல் கார், தற்போது ரூ.5.33 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

மேலும் எலைட் i20 மாடல் பெட்ரோல் கார் ரூ.5.31 லட்சத்திற்கும், டுவல்( பெட்ரோல் & டீசல்) டோன் கொண்ட கார் ரூ.8.97 லட்சத்திற்கும் தற்போது விற்கப்படுகிறது. இயான்(EON) மாடல் கார்கள் ரூ.3.35 லட்சத்தில் இருந்து, ரூ.4.56 லட்சம் வரை விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.4.63 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த தி கிராண்ட் i10 மாடல் கார், தற்போது ரூ.4.56 லட்சம் முதல் ரூ.7.30 லட்சம் வரை விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.