தூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையுமாம்!

தூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையுமாம்!

குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பலகலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி  நேரம் தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ  எடுத்தனர். அதே போன்று 4¼ மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில்  குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி  காணப்பட்டது. இதன் மூலம் முககவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.