ஜியோமி நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் விரைவில் துவக்கம்..!

ஜியோமி நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் விரைவில் துவக்கம்..!

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை திறக்க உள்ளது.

சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சந்தையில் கால்பதித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகக்குறைந்த காலகட்டத்தில் இந்தியாவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.

தற்போது வரை ஜியோமி நிறுவனத்தின் எம்.ஐ ஸ்மார்ட் போன்களை வாரத்தில் ஒரு முறை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்யக்கூடிய சூழல் இருந்தது. இதன் காரணமாக பல வாடிக்கையாளர்கள், நினைத்த நேரத்தில் எம்.ஐ ஸ்மார்ட் போன்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் பெங்களூருவில் “எம்.ஐ ஹோம்” என்ற தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை ஜியோமி நிறுவனம் துவங்க உள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் இந்த விற்பனை நிலையம் செயல்பட உள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் ஸ்மார்ட் போன்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான ஜியோமி நிறுவன தயாரிப்புகள் கிடைக்கும்.