ஜெனரல் மோட்டார்ஸின் கார் உற்பத்தி நிறுத்தம்!

ஜெனரல் மோட்டார்ஸின் கார் உற்பத்தி நிறுத்தம்!

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டுடன் தனது கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில்  கால்பதித்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில், ஏற்பட்ட நஷ்டத்தால் ஆண்டுக்கு 1.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் குஜராத்தில் இருக்கக்கூடிய தனது கார் தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. தற்போது, புனேவில் இருக்கக்கூடிய மற்றொரு கார் தொழிற்சாலையில், இனி ஏற்றுமதிக்குத் தேவையான அளவு கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனம், இந்தாண்டு இறுதியோடு இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை  நிறுத்த முடிவெடுத்துள்ளது.