ரசிகர்கள் என்றால் இப்படி இருக்கனும் - கதிராமங்கலத்தை காப்பாற்ற டுவிட்டரை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்

ரசிகர்கள் என்றால் இப்படி இருக்கனும் - கதிராமங்கலத்தை காப்பாற்ற டுவிட்டரை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள முக்கிய பிரச்னை கதிராமங்கலம். ஒஎன்ஜிசி நிறுவனம் மூலம் இங்குள்ள விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் எரிபொருள், அதன் மண் வளத்தையும், அங்கு திடீரென ஏற்பட்ட எண்ணெய் கசிவு போராட்டத்தை கடுமையாக்கியுள்ளது

விவசாயிகளின் பிரச்னை எங்களுடையது அல்ல என நினைக்காமல், விவசாயிகளுக்காக ஆதரவாக நடிகர் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் கிளம்பியுள்ளனர்.

டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் SAVE TN KATHIRAMANGALAM என்ற ஹேஸ் டேக்கை உருவாக்கி அதை இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் தயார் செய்த புகைப்படங்கள், மீம்ஸ் ஆகியவற்றை இந்த டேக் பயன்படுத்தி டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த படங்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்ததால் மிகவும் வைரலானது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான டுவிட்டுகள் இந்த டேக் பயன்படுத்தி இடம்பெற்றுள்ளன.

இதே போல மற்ற முன்னனி நடிகர்களின் ரசிகர்களும் கதிராமங்கலத்தை காப்பாற்ற முற்பட்டால், இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்களே....