விவேகம் பட பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

விவேகம் பட பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு விவேகம் என பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய்,  காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் படம்  ‘விவேகம்‘.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில்  நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு விவேகம் என பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இயக்குநர் சிவா , விவேக் ஓபராயை கமிட் செய்வதற்காக, உங்கள் பெயரை நினைவுபடுத்தும் விதமாகத்தான் விவேகம் என வைத்துள்ளதாக கூறி சம்மதிக்க வைத்தாரம்.