தாய்,தந்தையை அநாதையாக விடாதீர்கள்: ஆரி

தாய்,தந்தையை அநாதையாக விடாதீர்கள்: ஆரி

அன்னையர் தினத்தில் ஆரி தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள `இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவு உண்டார்.

 பின்னர் இயற்கை உரம் மூலம் காய்கறி உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூறிய அவர்…

நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை `அனாதையாக விட்டு விடாதீர்கள்’. எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் `உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து, எதிர்த்து குரல் கொடுங்கள்.

இயற்கையான மோர், இளநீர், கரும்பு சாரு, நுங்கு, எலுமிச்சை பழ நீர், இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள்

நாகரீகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர் பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எல்லா உணவு வகைகளிலும் நச்சு பொருட்கள் கலந்து விட்டது. எனவே இயற்கை உரங்களின் மூலம் காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை இன்று இந்த முதியோர் இல்லத்தில் அறிவிக்கிறேன்.

அனைவரும் ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். இப்படி நம் வீட்டிற்கு மட்டுமாவது இயற்கை உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அனைத்து குடியிருப்புகளிலும் இந்த திட்டம் தொடர ஊக்கப்படுத்துவோம் என்றார்.