பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட தோனி

பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட தோனி

விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிப் போட்டியில் விதர்பா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

டெல்லி பாலம் மைதானத்தில் நடந்த போட்டியில் விதர்பா அணி நிர்ணயித்த 160 ரன்கள் வெற்றி இலக்கை, 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 45.1 ஓவரில் ஜார்க்கண்ட் அணி எட்டியது. இந்த போட்டியில் தோனியின் பேமஸான சிக்ஸர் பினிஷிங் மாயாஜாலம் நிகழ்ந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியின்போது மற்றொரு சுவாரஸ்யமும் அரங்கேறியது. ஜார்க்கண்ட் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தையும் மீறி மைதானத்துக்குள் புகுந்த ரசிகர் ஒருவர் தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டார். அவரும் முகம்சுளிக்காமல் கையில் கிளவுஸுடன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.