இஸ்ரோவின் விருது பெரும் இந்திய விஞ்ஞானி

இஸ்ரோவின் விருது பெரும் இந்திய விஞ்ஞானி

இஸ்ரோவின் 'டேன் டேவிட் விருது' கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானி ஶ்ரீனிவாஸ் குல்கர்னிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வான் இயற்பியல் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். இவரது பூர்வீகம் மராட்டிய மாநிலம் ஆகும். வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கும், வார்சா பல்கலைக்கழகத்தின் ஆனட்ரெஜ் உதால்ஸ்கை, நாசாவின் நீல் கேஹ்ரல்ஸ்  ஆகிய 3 பேருக்கும், இஸ்ரேல் நாட்டின் ‘டேன் டேவிட்’ விருது கூட்டாக  வழங்கப்படுகிறது. ‘டேன் டேவிட்’ விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்  ரொக்கப்பரிசுடன் கூடியது. இந்த விருது வழங்கும் விழா வரும் 21-ம் தேதி டெல் அவிவ் நகரில் நடக்கிறது.