சென்னை உள் நாட்டு விமான நிலையத்தில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை!

சென்னை உள் நாட்டு விமான நிலையத்தில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை!

வருகிற மே 1-ந் தேதி முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் விமான பயணம் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படமாட்டது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய விமான நிலைங்களில் பயணிகளுக்கு ஒலிப்பெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிப்பதில்லை. மாறாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள் நாட்டு விமான நிலையத்திலும் விமானம் ரத்து, தாமதம் மற்றும் நுழைவு வாயில் மாற்றம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது. மாறாக எஸ்.எம்.எஸ். மூலமே தகவல் தரப்படும். இந்த நடைமுறை வருகிற மே 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.